Advertisement

AUS vs ZIM, 2nd ODI: காயத்தினால் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!

காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

Advertisement
Marsh ruled out of remaining ODIs vs Zimbabwe due to ankle soreness
Marsh ruled out of remaining ODIs vs Zimbabwe due to ankle soreness (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 30, 2022 • 11:30 AM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 30, 2022 • 11:30 AM

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை டவுன்ஸ்விலேவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற தொடரை வெல்லும், அதேசமயம் ஜிம்பாப்வே வெற்றிபெற்றால் தொடரை சமன் செய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

இந்நிலையில் ஜிம்பாப்வே அணியுடனான போட்டியின் போது ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷிற்கு காயம் ஏற்பட்டத்து. அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், ஜிம்பாப்வேவுடனான தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

மேலும் மிட்செல் மார்ஷிற்கு மாற்று வீரராக ஜோஷ் இங்கிலிஷ் மீதமுள்ள இரு ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement