
Martin Guptill's Availability Underscanner After Suffering Toe Injury During Pakistan Tie (Image Source: Google)
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளன. இதனால் அக்டோபர் 31ஆம் தேதி இரு அணிகளுக்கிடையே நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதில் தோல்வியடையும் அணியால் அவ்வளவு எளிதாக அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் காயம் அடைந்தார்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்து, கப்திலின் காலைப் பதம் பார்த்தது. இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.