
Mayank Agarwal & Ravi Ashwin Make Huge Hops In ICC Test Rankings (Image Source: Google)
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்ட் போட்டியில் வெளுத்து வாங்கிய மயங்க் அகர்வால் முதல் இன்னிங்ஸில் 150 மற்றும் 2வது இன்னிங்ஸ் அரைசதம் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் பெரிய பாய்ச்சல் மேற்கொண்டுள்ளார். அஸ்வின் ஆல்ரவுண்டராக 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
10 விக்கெட் சாதனை மன்னன் அஜாஸ் படேலும் பெரிய முன்னேற்றம் கண்டார். மும்பை டெஸ்ட்டில் 150 மற்றும் 62 ரன்கள் எடுத்து வெற்றியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற மயங்க் அகர்வால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 30 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ந
மும்பையில் பிறந்து உலக சாதனை படைத்த அஜாஸ் படேல் 23 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 38ஆம் இடத்துக்கு வந்துள்ளார்.