Advertisement
Advertisement
Advertisement

WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் டபிள்யூபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 14, 2024 • 22:33 PM
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்
WPL 2024 Eliminator: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன் (Image Source: Cricketnmore)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணி  -மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி மைதானமானது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களும் அபாரமாக செயல்படமுடியும். அதேசமயம் இங்கு எதிரணியை தடுப்பது சவாலாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • மும்பை இந்தியன்ஸ் - 03
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 01

உத்தேச லெவன்

மும்பை: யாஸ்திகா பாட்டியா, ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹர்மன்பிரீத் கவுர் (கே), அமெலியா கெர், எஸ் சஜனா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், ஹுமைரா காசி, ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக்.

பெங்களூரு: ஸ்மிருதி மந்தனா (கே), எல்லிஸ் பெர்ரி, சோஃபி டிவைன், ரிச்சா கோஷ், சோஃபி மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், திஷா கசத், ஸ்ரேயங்கா பாட்டீல், ஷ்ரத்தா போகர்கர், ஆஷா சோபனா, ரேணுகா தாக்கூர் சிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யஷ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ்: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா
  • ஆல்-ரவுண்டர்கள்: சோஃபி டெவின், ஹேலி மேத்யூஸ் (துணை கேப்டன்), நாட் ஸ்கிவர்-பிரண்ட், அமெலியா கெர், எல்லிஸ் பெர்ரி (கேப்டன்), சோஃபி மோலினக்ஸ்
  • பந்துவீச்சாளர் - ஷப்னிம் இஸ்மாயில்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement