
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான். ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஹாம்ப்ஷையரில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக விளையாட உள்ளன.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இரு இடத்தில் இருக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்திற்காக மோதவுள்ளது இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று யார் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்கள் ? என்பது குறித்த கேள்வி தற்போது சமூக வலைதளத்தில் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் கூறுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து அணியே கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.