‘மழையால் இந்தியா தப்பியது’ - ரசிகர்களை சீண்டும் வாகன்!
வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமயிலான நியூசிலாந்து அணியும் இன்று களம் காண இருந்தது.
முதல் முறையாக ஐசிசி நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்களை அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்ப்டன் மைதானத்தில் போட்டி நடைபெற இருந்தது.
Trending
இந்நிலையில் சவுத்தம்ப்டனில் அதிகாலை முதல் தொடர் மழை பேய்ததன் காரணமாக, இப்போட்டியின் டாஸ் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.
மழை காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமாடைந்தனர். மேலும் இங்கிலாந்து வானிலை தொடர்பாக டுவிட்டரில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில்,“வானிலையால் இந்தியா காப்பாற்றப்பட்டதாக நான் பார்க்கிறேன் #உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவை கிண்டல் அடிக்கும் வகையில் மைக்கேல் வாகனின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now