Advertisement

எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி விளையாடவுள்ளது.

Advertisement
எஸ்ஏ20 2024:  மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன
எஸ்ஏ20 2024: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 23, 2024 • 02:48 PM

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் கீரென் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து, கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. ஏற்கெனவே இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 23, 2024 • 02:48 PM

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -  மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் -  நியூலேண்ட்ஸ் மைதானம், கேப்டவுன்
  • நேரம் - மாலை 9 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் நியூலேண்ட்ஸ் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் இங்கு  பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர் இடையே பெரிய போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் இங்கு முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் சராசரியாக 175 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரலை

இத்தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் - 03
  • மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் - 03

உத்தேச லெவன்

எம்ஐ கேப் டவுன்: ரஸ்ஸி வான்டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கானர் எஸ்டெர்ஹூய்சன், கீரன் பொல்லார்ட்(கே), ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபாடா, தாமஸ் கேபர், நுவான் துஷாரா.

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ ப்ரீட்ஸ்கி, குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், ஜேஜே ஸ்மட்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ்(கே), வியான் முல்டர், நவீன்-உல்-ஹக், ரீஸ் டாப்லி, நூர் ஆஹ்மத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: ரியான் ரிக்கெல்டன்(துணைக்கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்
  • பேட்டர்ஸ்: கீரன் பொல்லார்ட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ரஸ்ஸி வேண்டர் டுசென், மேத்யூ ப்ரீட்ஸ்கி(கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: ஜேஜே ஸ்மட்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், சாம் கரண்
  • பந்துவீச்சாளர்கள்: ரீஸ் டாப்லி, நுவான் துஷாரா

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports