ஆஷஸ் 2021: 85 ஆண்டுகால சாதனையைப் படைத்த ஸ்டார்க்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 85 ஆண்டு கழித்து மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேப்டனாக முதல் போட்டியிலேயே கமின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.மேலும் , இந்த ஆட்டத்தின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ரோரி பர்ன்ஸை ஆஸி., பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் போல்ட் செய்து விக்கெட் எடுத்தார்.
Trending
WHAT A WAY TO START THE #ASHES! pic.twitter.com/XtaiJ3SKeV
— cricket.com.au (@cricketcomau) December 8, 2021
இதன்மூலம் 1936ஆம் ஆண்டிற்குப் பின் கிட்டத்தட்ட 85 ஆண்டுகள் கழித்து ஆஷஸ் டெஸ்ட்டில் முதல் பந்தில் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்கிற சாதனையை மிட்செல் ஸ்டார்க் புரிந்திருக்கிறார்..
Win Big, Make Your Cricket Tales Now