மகளிர் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த மிதாலி ராஜ்!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் எடுத்த முதல் கேப்டன் என்கிற பெருமையை இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பெற்றுள்ளார் .
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
5ஆவது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் நியூசிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களே எடுக்க முடிந்தது.
Trending
இந்திய அணி இலக்கை நன்கு விரட்டி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை அடைந்தது. ஸ்மிருதி மந்தனா 71, ஹர்மன்ப்ரீத் கெளர் 63, கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாகத் தனது 50ஆவது அரை சதத்தை இன்று பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ். இதன்மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ ரன்களை 50 முறை எடுத்த முதல் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதுவரை 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ், 7 சதங்களும் 62 அரை சதங்களும் எடுத்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் மூன்று அரை சதங்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: அதிகமுறை 50+ ரன்கள் எடுத்த கேப்டன்கள்
- மிதாலி ராஜ் - 50
- சார்லோட் எட்வர்ட்ஸ் - 33
- பெலிண்டா கிளார்க் - 29
- பேட்ஸ் - 28
- மேக் லேனிங் - 23
Win Big, Make Your Cricket Tales Now