மகளிர் உலகக்கோப்பை 2022: கேப்டன்சியில் சாதனைப் படைத்த மிதாலி!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்க்கெட் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீராங்கனை எனும் சாதனையை இந்திய கேப்டன் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹாமில்டனில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரின் அபார சதத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்களைச் சேர்த்தது.
Trending
மேலூம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் (24 போட்டிகள்) கேப்டனாக இருந்தவர் என்ற புதிய சாதனையை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
முன்னதாக 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now