ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசியின் மகளிர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். கடந்த 22 ஆண்டுகளாக இவர் இந்திய மகளிர் அணிக்காக தனது பங்களிப்பை செலுத்தி வருகிறார்.
அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களை விளாசி அசத்தினார். இருப்பினும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது.
Trending
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மகளிருக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் மிதாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளார்.
@M_Raj03 is the new No.1
— ICC (@ICC) July 6, 2021
In the latest @MRFWorldwide ICC Women's ODI Player Rankings for batting, the India skipper climbs to the of the table.
Full list: https://t.co/KjDYT8qgqn pic.twitter.com/2HIEC49U5i
இத்தொடருக்கு முன்னதாக அவர் 8ஆம் இடத்தைப் பிடித்திருந்தார். ஆனால் இத்தொடரில் மூன்று அரைசதங்களை விளாசி 206 ரன்களை குவித்ததன் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now