Advertisement

எம்எல்சி 2025: சதமடித்து மிரட்டிய கிளென் மேக்ஸ்வெல்; வாஷிங்டன் ஃப்ரீடம் அபார வெற்றி!

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸுக்கு எதிரான எம்எல்சி போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Advertisement
எம்எல்சி 2025:  சதமடித்து மிரட்டிய கிளென் மேக்ஸ்வெல்; வாஷிங்டன் ஃப்ரீடம் அபார வெற்றி!
எம்எல்சி 2025: சதமடித்து மிரட்டிய கிளென் மேக்ஸ்வெல்; வாஷிங்டன் ஃப்ரீடம் அபார வெற்றி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 18, 2025 • 11:32 AM

மேஜர் லீக் கிரிக்கெட் 2025: லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்தும் அசத்தினர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 18, 2025 • 11:32 AM

எம்எல்சி தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மிட்செல் ஓவன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் ஓவனும் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்னர் களமிறங்கிய ஆண்ட்ரிஸ் கஸ் 12, மார்க் சாப்மேன் 17, ஜேக் எட்வர்ட்ஸ் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 48 பந்துகளில் தனது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 106 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் சங்கா, கோர்ன் ட்ரை தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், சுனில் நரைன், உன்முக்த் சந்த் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சைஃப் பதர் ஒரு பக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் களமிறங்கிய ரோவ்மன் பாவெல் 4 ரன்களுக்கும், மேத்யூ ட்ரோம்ப் 2 ரன்களிலும் என ஆட்டமிழக்க சைஃப் பதரும் 32 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 23 ரன்களைச் சேர்த்தார். 

Also Read: LIVE Cricket Score

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததன் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி தரப்பில் மிட்செல் ஓவன் மற்றும் ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement