
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது அசாரூதின். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தே்ாந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டவிதிகளை மீறியதாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் உயர்மட்ட குழு அவரை தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில் ‘10 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்கும் துபாயைச் சேர்ந்த நார்த்தன் வாரியர்ஸ் என்ற தனியார் கிரிக்கெட் கிளப்பின் ஆலோசகராக நீங்கள் (அசாருதீன்) இருக்கிறீர்கள். இந்த 10 ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்கவில்லை. அந்த கிளப்பின் ஆலோசகராக இருப்பதை நீங்கள் எந்தவொரு நேரத்திலும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கோ, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கோ தகவல் தெரிவித்தது கிடையாது.