
Cricket Image for WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு! (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 32 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஜூன் 22ஆம் தேதி இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியும் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.