
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வீரர்கள், எதிரணி வீரர்களிடம் தேவையில்லாமல் மோதி வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பேட் செய்தது.
இப்போட்டியில் விராட் கோலி, மஹிபால் லோமரோர் அரைசதம் அடிக்க, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள், ஆர்சிபி பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர்.
டேவிட் வார்னர் 14 பந்தில் 22 ரன்கள் சேர்க்க, பில் சால்ட் , ஆர்சிபி பந்துவீச்சை துவைத்தார். குறிப்பாக, நடப்பு சீசனில் முகமது சிராஜ் பவர்பிளேவில் சிறப்பாக பந்துவீச, இன்றைய ஆட்டத்தில், அவருடைய பந்தில் பவுண்டரிகளதக பறந்தது. இதனால் 4.2ஆவது ஓவரில் எல்லாம் டெல்லி அணி 50 ரன்கள் எடுத்தது.