
Mohammed Siraj Responds To Tendulkar's Huge Praise; 'Will Always Do Best For My Country' (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்-ஜை புகழ்ந்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.
அதன்படி, “சிராஜ் வெகு விரைவாக அனைத்து விசயங்களையும் கற்றுக்கொண்டு தற்போது சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது உடல்மொழி நல்ல முதிர்ச்சியான வீரரை போன்று வெளிப்பட்டு வருகிறது.
மேலும் அவரது கால்களில் ஸ்ப்ரிங் உள்ளது போன்று அவ்வளவு வேகமாக ஓடிவந்து பந்து வீசுகிறார். நிச்சயம் அவர் இதே போன்று தொடர்ந்து பந்துவீசும் பட்சத்தில் மிகப்பெரிய பவுலராக வருவார்” என்று தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் இந்த வாழ்த்துக்கு பதிலளிக்கும் விதமாக தற்போது சிராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.