லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய சிராஜ்; கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்த இளம் வீரர் முகமது சிராஜை பாராட்டி, அவரின் வீட்டிற்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்து கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
கடைசி நாள் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், அடுத்தடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Trending
அதிலும் 2ஆவது டெஸ்டில் அபாரமாக பந்துவீசிய சிராஜ், 2 இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தமாக 8 விக்கெட் வீழ்த்தினார். அவரின் இளமை துடிப்பும், வேகமும், கோலியின் ஐடியாக்களை செயல்படுத்துவதிலும் மிகச்சிறப்பாக உள்ளதால், முகமது ஷமிக்கு அடுத்ததாக இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முகமது சிராஜை பாராட்டும் வகையில், அவரின் சொந்த ஊரான ஹைதராபாத் நகரில் மிக பிரமாண்டமான கட் அவுட் ஒன்று நிருவப்பட்டுள்ளது. தான் விக்கெட் எடுத்ததற்கு பிறகு வாயில் விரலை வைத்து ‘உஷ்.. கம்முனு இரு' என்பது போல் செய்து காட்டுவார். அவரின் அந்த பழக்கம் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாகி வருகிறது. எனவே இந்திய ஜெர்ஸியில் அவர் வாயில் விரலை வைத்திருப்பது போன்றே அந்த கட் அவுட்டும் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now