அமெரிக்க அணியை வழிநடத்தும் இந்திய வீரர்!
ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் புதிதாக தடம்பதித்து வரும் அமெரிக்க அணி சமீப காலமாக மிகச்சிறப்பான ஆட்டங்களை விளையாடி வருகிறது.
அந்தவரிசையில் தற்போது பல நாடுகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் கிரிக்கெட் வீரர்களும் தற்போது அமெரிக்க அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர்.
Trending
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கவுள்ள அமெரிக்க அணியின் கேப்டனாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொனாக் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இத்தொடருக்கான 14 பேர் அடங்கிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் நிசார்க் படேல், சவுரப் நெத்ரவல்கர் ஆகிய இந்திய வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
அமெரிக்க அணி: மொனாங் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ், அலிகான், கேமரூன் ஸ்டீவன்சன், கஜானந்த் சிங், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, மார்டி கெய்ன், நிசார்க் பட்டேல், ரஸ்டி தெரோன், சவுரப் நேத்ரவல்கர், ஸ்டீவன் டெய்லர், சுஷாந்த் மோதானி, யாசிர் முகமது, வத்சல் வகேலா.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்றிருந்தது. இந்நிலையில் அத்தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அமெரிக்க அணியின் கேப்டனாக மொனாக் படேல் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now