இந்திய அணியால் சுலபமாக வெற்றிபெற இயலாது - மாண்டி பனேசர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றிபெற இயலாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ஜூன் 18ஆம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றிபெற இயலாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய பனேசர்,“நியூசிலாந்து உலகின் சிறந்த கிரிக்கெட் அணி. அவர்களிடம் சில இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்துவீச கூடியவர் என்பதால் இந்திய அணியின் முதல் தேர்வாக இருப்பார்.
அதேசமயம் நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருவதால், இந்திய அணிக்கு வெற்றி சுலபமாக கிடைத்துவிடாது. போட்டி நிச்சயம் பரபரப்பாக இருக்கும். இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலை நியூசிலாந்து அணிக்குச் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து மைதானங்களும், நியூசிலாந்து மைதானங்களும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும். இருப்பினும், அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி இடது கை பேட்ஸ்மேன்களான டேவன் கான்வே, டாம் லதாம் ஆகியோர் விக்கெட்டை விரைந்து எடுக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் நியூசிலாந்து அணியில் டிம் சௌதி, ட்ரெண்ட் போல், நெய்ல் வாக்னர், மேட் ஹென்றி என தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now