
Morne Morkel Wants Du Plessis To Play T20 World Cup 2022 (Image Source: Google)
தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஃபாஃப் டூ பிளெசிஸ். இவர் கடந்த 2020 முதல் தென் ஆப்பிரிக்கா அணியில் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்காக அட்டகாசமாக விளையாடிள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய மோர்கல், “டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் வாய்ந்த பெரிய வீரர் யாராவது தேவைப்படுகிறார்கள். டு பிளெஸ்சி 37 வயதிலும் நன்றாக விளையாடுகிறார். பீல்டிங்கிலும் நன்றாகவே இருக்கிறார். அவர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அருமையாக விளையாடுவதை பார்க்கிறோம்.