
Morris, du Plessis miss out, Maharaj included in South Africa's T20 World Cup squad (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி வருகிறது. இதில் பங்கேற்கவுள்ள இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் தங்கள் அணியை அறிவித்துள்ளன.
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹீர் ஆகியோருக்கு இடமில்லை.