
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, பைக் மற்றும் கார்கள் மீதான எவ்வளவு ஈர்ப்பு கொண்டிருப்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கார் பிரியர் ஆன தோனி தனது பயன்பாட்டுக்காகப் பல வகையான கார்களை வாங்கி வைத்துள்ளார். இப்போது அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது 'லேண்ட் ரோவர் 3' மாடல் கார்.
பிக் பாய் டாய்ஸ் (Big Boy Toyz) என்ற நிறுவனம் உலகின் புகழ்பெற்ற நிறுவனங்களின் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களை ஆன்லைன் மூலமாக ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் ரோல்ஸ் ராய்ஸ், காடிலாக், ப்யூக், செவ்ரோலெட், லேண்ட் ரோவர், ஆஸ்டின், மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களின் புகழ்பெற்ற 19 பிரத்யேக கிளாசிக் வகையான கார்கள் இடம்பெற்றிருந்தன.
எம்.எஸ்.தோனி இந்த ஏலத்தில் பங்கேற்று 'லேண்ட் ரோவர் சீரிஸ் III ஸ்டேஷன் வேகன்' மாடல் காரை வாங்கியுள்ளார். இந்த கார் 1971ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ஏலத்தை நடத்திய நிறுவனம் தோனி வாங்கிய லேண்ட் ரோவர் காரின் விலையை வெளியிட மறுத்துள்ளது.