
MS Dhoni and Sakshi all set to become parents in 2022 (Image Source: Google)
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி. தற்போது 40 வயதாகும் தோனி கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷி சிங் ராவத்தை திருமணம் செய்து கொண்டார்.
எம்எஸ் தோனி - சாக்ஷி தம்பதிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஸிவா எனப் பெயர் சூட்டியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை எம் எஸ் தோனி, அவரது மனைவி சாக்ஷி, மகள் ஸிவா, சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகள் கொண்டாடினர்.