Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: இமாலய சாதனையை நிகழ்த்திய எம் எஸ் தோனி!

டி20 கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மகேந்திர சிங் தோனி சாதனைப் படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 15, 2021 • 22:41 PM
MS Dhoni becomes first captain to lead 300 matches in T20 format
MS Dhoni becomes first captain to lead 300 matches in T20 format (Image Source: Google)
Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன. 

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 192 ரன்கள் குவிக்க தற்போது 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

Trending


இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டி20 கிரிக்கெட்டில் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இந்த இறுதி போட்டி மூலம் சென்னை அணியை 9ஆவது முறையாக வழிநடத்தும் தோனி இன்று தனது 300ஆவது டி20 போட்டியில் விளையாடி வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை 72 போட்டிகளில் வழி நடத்தியுள்ள அவர் 41 வெற்றிகளையும், 28 தோல்விகளையும் சந்தித்து உள்ளார். அதேபோன்று சி.எஸ்.கே அணியை 213 போட்டியில் வழிநடத்தியுள்ள தோனி, 130 வெற்றிகளையும், 81 தோல்விகளையும் சந்தித்து உள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் புனே அணிக்காக 14 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 5 வெற்றிகள் மற்றும் 9 தோல்விகள் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அதிக முறை டி20 அணியை வழிநடத்திய கேப்டனாக தோனி தற்போது மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement