
MS Dhoni Having Fun Time With Pet Pony, Picture Goes Viral (Image Source: Google)
தோனி, ஒரு பைக் காதலன் என்று கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களுக்கு கூட தெரியும், ஆனால் அவருக்கு விலங்கு என்றால் அவ்வளவு பிரியமாம். தோனி, அசைவ உணவை விரும்பி சாப்பிடக்கூடியவர் என்றாலும் விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.
தற்போது ஐபிஎல் தொடருக்கு முன் தன் சொகுசு வீட்டில் தோனி ஓய்வில் உள்ளார். அப்போது நடு வீட்டில் நாயுடன் விளையாடி பார்த்து இருப்போம், இல்லை பூணையுடன் விளையாடி பார்த்திருப்போம். ஆனால் தல தோனி வித்தியாசமாக குதிரையை நடு வீட்டில் வைத்து விளையாடியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே தோனி தனது வீட்டில் பஞ்சவர்ண கிளி, விதவிதமான நாய் வகைகளை வைத்துள்ளார். விலங்குகள் மட்டும் தோனி வளர்க்கவில்லை. விவசாயமும் அதிகளவில் செய்து வருகிறார்.