என்சிசி மறுசீரமைப்பு ஆய்வு குழுவில் எம்எஸ் தோனி!
தேசிய மாணவர் படை (என்சிசி) அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வு குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பெற்றுள்ள்ளார்.
இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான தேசிய மாணவர் படை (என்.சி.சி) தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், உயர் மட்டக்குழு ஒன்றை முன்னாள் அமைச்சர் பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது.
இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, எம்.பி. விநய் சஹஸ்ரபுத்தே , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது. இவர்கள் என்சிசியை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
Trending
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் ஒருமாதம் தங்கியிருந்து பயிற்சி பெற்றதால் தோனி இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய முன்னாள் கேப்டனான தோனிக்கு, இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்ணல் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now