ஐபிஎல் 2021: இணையத்தில் வைரலாகும் தோனியின் புரமோ காணொளி!
ஐபிஎல் தொடரின் 2ஆம் பகுதிக்கான மகேந்திர சிங் தோனி நடித்து வெளியாகியுள்ள புரோ காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது.
போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்யும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் இத்தொடரை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி முதலில் மகேந்திர சிங் தோனியை வைத்து ஒரு அசத்தலான புரமோவை உருவாக்கி அதை வெளியிட்டிருக்கிறார்கள்.
IPL 2021 Second Phase Advertisement Featuring Ms Dhoni
— CRICKETNMORE (@cricketnmore) August 20, 2021
.
.#Cricket #msdhoni #ipl2021 #indiancricket pic.twitter.com/Lh7TwztdoG
கலரிங் செய்த சிகை அலங்காரம், ஜொலிக்கும் சட்டையுடன் மகேந்திர சிங் தோனி தோன்றும் இக்காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now