ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
கிரிக்கெட் வீரர் தோனி இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பிரபலமாக மாறி விட்டார் என்பதை காட்டும் வகையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தோனி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே அவர் பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
அவர் மீது அரசாங்க ரீதியாக பல்வேறு வழக்குகள் நடந்து வருவதும் ஒரு காரணம். இந்த நிலையில் தான் அமெரிக்கா சென்ற தோனி அங்கே கோல்ஃப் ஆடும் போது டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் அருகருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் இந்தியா வந்துள்ள WWE வீரர்கள் தோனி பற்றி பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதை அடுத்து தற்போது முன்னாள் அமெரிக்க அதிபருடன் கோல்ஃப் விளையாடும் காணொளி வைரலாகி வருக்கிறது. தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது மவுசு மட்டும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதுதான் மிகவும் ஆச்சரியம். ஐபிஎல் தொடரில் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.MS Dhoni and former US President Donald Trump in a Golf Game.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 8, 2023
- MSD, an icon, a legend....!!!! pic.twitter.com/d9o1TfHmSX
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News