
இந்தாண்டு ஐபிஎல்-ல் சரிவில் இருந்த சிஎஸ்கே அணிக்கு, தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்று நம்பிக்கை கொடுத்துள்ளார். அடுத்த வருட ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்பது போன்று உறுதி கொடுத்து சென்றார்.
இந்நிலையில் கிரிக்கெட்டை ஒதுக்கிவிட்டு, தோனி தனது அடுத்த பணிகளில் களமிறங்கியுள்ளார். ஓய்வுக்கு பிறகு தோனி, ஆடை நிறுவனம், மதுபானம், விவசாயம் என பல தொழில்களில் கலக்கி வருகிறார். தற்போது ட்ரோன்களிலும் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளார். அதுவும் விவசாயத்திற்காகவாம்.
சென்னையை சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான "கருடா ஏரோ ஸ்பேஸ்" -ல் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனம் விவசாயத்திற்கு உதவும் நவீன ட்ரோன்களை உற்பத்தி செய்யவுள்ளது. தோனி ஏற்கனவே விவாசயம் செய்துவரும் சூழலில், இனி நாடு முழுக்க விவசாயத்திற்கு ட்ரோன்கள் தான் உதவும் என்ற கணிப்பில் பணத்தை போட்டுள்ளார்.