
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
இந்த 8 போட்டிகளிலும் சொதப்பியதற்கு முக்கிய காரணம் ஓபனர் ருதுராஜ் ஃபார்ம் அவுட், மொயின் அலிக்கு காயம், தீபக் சஹார் இல்லாதது, பௌலர்கள் முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிடோரியஸ் சொதப்பல் என காரணங்களை அடுக்கிக்கொண்டே சொல்லலாம்.
இருப்பினும், இதில் முதன்மை காரணமாக பார்க்கப்படுவது கேப்டன் ரவீந்திர ஜடேஜாதான். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படக் கூடிய இவர், கேப்டன் பதவி கிடைத்த பிறகு அழுத்தங்கள் காரணமாக சிறப்பாக செயல்படவில்லை. சுலபமான கேட்சைகூட விட்டுவிடுகிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும், எப்படியாவது 6 பந்துகளை போட்டுவிட்டால்போதும் என்ற மனநிலையில்தான் செயல்பட்டு வருகிறார்.