தோனியிடன் பேசும் போது நிறைய நம்பிக்கை கிடைத்தது - முகேஷ் சௌத்ரி!
சிஎஸ்கே அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தோனியின் ஆதரவு குறித்தும் முகேஷ் சவுத்ரி மனம் திறந்து பேசியுள்ளார்.
சிஎஸ்கே அணியின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் சவுத்ரி. இவர் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது தனக்கு கிடைத்த ஆதரவு குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது 26 வயதான முகேஷ் சவுத்ரி கடந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக சென்னை அணியால் 20 லட்சம் ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அவரது திறனை உணர்ந்த தோனி அவருக்கு சிஎஸ்கே அணி விளையாடும் வாய்ப்பினையும் அளித்தார். அதன்படி நடைபெற்று முடிந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
Trending
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது குறித்தும், தோனியின் ஆதரவு குறித்தும் பேசிய முகேஷ் சவுத்ரி கூறுகையில், “நான் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் சென்னை அணிக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டு பேருந்தில் முதல்முறையாக பயணித்த போது தோனி என்னுடைய தோளின் மீது தட்டி நீ சிறப்பாக விளையாடுவாய் என்று ஊக்கப்படுத்தினார். அப்போதுதான் நான் அவருடன் இருக்கிறேன் என்று புரிந்தது. அப்போது நான் மிகவும் பெருமையாக உணர்ந்தேன்.
சென்னை அணியில் நான் விளையாடிய முதல் இரண்டு, மூன்று போட்டிகளில் என்னுடைய திறனுக்கு ஏற்ற அளவு என்னுடைய செயல்பாட்டினை வெளிப்படுத்தவில்லை. அதன் பின்னர் தோனியிடம் சென்று நிறைய பேச ஆரம்பித்தேன். ஒவ்வொரு போட்டிக்கும் முன்னரும் அவரிடம் பேசும் போது நிறைய நம்பிக்கை கிடைத்தது.
அதோடு ருதுராஜ் கெய்க்வாட்டும் எனக்கு மிக நெருங்கிய நண்பர். அவரும் எனக்கு சில ஆலோசனைகளை கொடுத்தார். முதல் இரண்டு மூன்று போட்டிகளில் நான் சொதப்பிய போதும் கூட தோனி என்னிடம் வந்து நான் உன் திறனின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். உன்னால் நிச்சயம் சிறப்பாக செயல்பட முடியும். நீ இந்த தொடரில் அசத்துவாய் என்று நம்பிக்கை அளித்தார்.
அவர் கொடுத்த அந்த ஊக்கமே நான் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட உதவியது. அதேபோன்று போட்டிக்கு முன்பு மட்டும் இல்லாமல் போட்டியின் போதும், போட்டிக்குப் பிறகும் என எல்லா கட்டங்களிலும் தோனி எனக்கு பல விடயங்களை கற்றுக்கொடுத்து கொண்டே இருந்தார். அவர் கூறுவதை நாம் கடைபிடித்தால் மட்டும் போதும் நம்மால் சிறப்பாக செயல்பட முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now