தோனி குறித்த சுவாரஸ்யமான தருணத்தைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரீனிவாசன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து அதன் உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் சில பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கும், தோனிக்குமான உறவு நாம் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. அவரே பல முறை, சென்னையை தனது 2ஆவது தாய் வீடு என்று பலமுறை கூறி இருக்கிறார்.
சென்னை அணிக்காக விளையாடியதால் மட்டும் அவரால் எப்படி இவ்வளவு பாசம் வைக்க முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் வருவது இயற்கை தானே.
இது குறித்து, விளையாட்டு தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட ஸ்ரீனிவாசனிடம் கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய அவர், “சென்னைக்கு தோனி முதல்லி வந்த உடன் , அவர் என்னிடம் பைக் தான் கேட்டார். சரி என்று அவருக்கு ஓரு பைக் ஏற்பாடு செய்து கொடுத்தோம். அவ்வளவு தான், அடுத்த நிமிடம் அவரை காணவில்லை. தோனிக்கு பைக் என்றால் அவ்வளவு பிரியம்.
பைக் மூலம் தோனி சென்னையில் எப்போதும் சற்றி கொண்டே இருப்பார். சென்னையின் அனைத்து முக்கிய பகுதிக்கும் தோனி தனது பைக் மூலம் பயணம் செய்து நேரத்தை செலவிட்டு இருக்கிறார். கிரிக்கெட்டை தாண்டி சென்னை மீது தோனிக்கு இருந்த காதலும், தோனி மீது சென்னைக்கு இருந்த காதலும், இப்படி தான் வளர்ந்து கொண்டே சென்றது.முக்கியமான போட்டிகளுக்கு முன்பு கூட தோனி பைக் ரைடு சென்று விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now