
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார். ஒருபக்கம் மும்பை வீரர்கள் விக்கெட்டுகளை கடகடவென தாரை வார்க்க, மறுபக்கம் கைமேல் வந்த “லட்டு” கேட்சுகளை தவறவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சென்னை அணி.
இதே வேளையில் பிராவோவும் தன் பங்குக்கு ஒரு கேட்சை மிஸ் செய்ய அடுத்ததாக சூர்யகுமார் அடித்த பந்தை ஜடேஜா மிஸ் செய்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து அதிரடி காட்டத் தயாராகிய பொல்லார்டை வீழ்த்த தனது பழைய வியூகம் ஒன்றை வகுத்தார்.
பொல்லார்டின் ஆட்டத்தை கணித்து 2010 ஆம் ஆண்டு மும்பையுடனான இறுதிப் போட்டியில் வகுத்த வியூகம் அது. மிட்-ஆஃபில் இருந்த பீல்டரை நடுவருக்குப் பின்னால் நேராக வட்டத்தின் விளிம்பிற்கு நகர்த்திச் சென்று நிற்க வைப்பது தான் அந்த வியூகத்தின் முக்கிய நகர்வு.