
MS Dhoni wins our hearts all over again as he meets CSK's specially-abled fan! (Image Source: Google)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் எதிர்பார்த்தது போல் சிஎஸ்கே அணிக்கு அமையவில்லை. இந்த நிலையில், நடப்பு சீசனுக்கு பிறகு கேப்டன் தோனி முதல் முறையாக சென்னைக்கு வந்துள்ளார்.
தோனி திருமண நிகழ்ச்சி அல்லது டிஎன்பிஎல் குறித்து பங்கேற்பதற்காக சென்னை வந்ததாக தகவல் வெளியானது.
ஆனால், நேரடியாக சென்னையில் தனது மாற்றுத் திறனாளி ரசிகையை தோனி அவரது இல்லம் தேடி சென்று சந்தித்தார். அப்போது லாவண்யா என்ற அந்த ரசிகை, தோனியின் ஓவியத்தை வழங்கினார். இதனை பார்த்த தோனி அவருக்கு கைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.