Advertisement

தோனியின் பதில் வித்தியாசமாக உள்ளது - ஷேன் வாட்சன்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பதில் சற்று வித்தியாசமாக உள்ளதாக முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 08, 2021 • 14:32 PM
 MS Dhoni’s answer on his future is very different from what he said last year, says Shane Watson
MS Dhoni’s answer on his future is very different from what he said last year, says Shane Watson (Image Source: Google)
Advertisement

சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது 40 வயதை கடந்த தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று உறுதியாக கூறமுடியாது. இந்நிலையில் அடுத்த ஆண்டும் தான் விளையாடுவதாக தோனி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். ஆனாலும் தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த பேச்சு இதுவரை சமூகவலைதளத்தில் அடங்கவில்லை.

இந்நிலையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது பேசிய தோனி, “நான் அடுத்த ஆண்டு மஞ்சள் நிற உடையில் இருப்பேன். ஆனால் சிஎஸ்கே அணியில் விளையாடுவேனா என்பது தெரியாது” என்று புதிரான ஒரு பதிலை அளித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில் அவர் அணிக்காக விளையாடாமல் நிர்வாகத்தில் ஏதாவது ஒரு பொறுப்பில் இருப்பாரா ? என்பது போன்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending


இப்படி தோனியின் கருத்துகள் ஒவ்வொன்றும் முன்னுக்குப்பின் முரணாக இருக்க அவர் அடுத்த ஆண்டு விளையாடுவாரா ? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய வாட்சன், “தோனி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது பேசியது எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. அவரது பதில் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது நிச்சயம் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று உறுதியாக கூறி இருந்தார். அதன் காரணமாகவே அவர் இந்த ஆண்டு விளையாடி வருகிறார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஆனால் தற்போது அவர் கூறியிருப்பதை பார்க்கும்போது அந்த பதிலில் ஒரு உறுதி இல்லை என்று தோன்றுவதாக தெரிகிறது. இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமாயின் தோனி நிச்சயம் இடம் பெறுவார்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement