
MS Dhoni’s Look in IPL 2022 promo! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா காரணமாக போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மற்றும் புனேவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு இருக்கும். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி ஒவ்வொரு கெட்டப் மற்றும் ஹேர்ஸ்டைல்களில் காட்சியளித்து குஷி ஏற்படுத்துவார். அந்தவகையில் இந்தாண்டும் புதிய கெட்டப் ஒன்றில் தோனி தரிசனம் கொடுத்துள்ளார்.
அதன்படி அவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் அதிக தலைமுடியுடன், காக்கிச்சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் போன்று காட்சி தருகிறார். அதுவும் சென்னையில் இருக்கும் ஓட்டுநர் போன்று எண்ட்ரி தருகிறார்.