Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 05, 2024 • 13:07 PM
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறும் 21ஆவத் லீக் போட்டியில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியை எதிர்த்து, முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் பெஷாவர் ஸால்மி அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகளைக் குவித்து பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் -  இஸ்லாமாபாத் யுனைடெட் vs பெஷாவர் ஸால்மி
  • இடம் - ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம், ராவல்பிண்டி
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானமானது பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்புக்கும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இங்கு அதிகளவு பவுன்ஸ் இருப்பதால் பேட்டர்களால் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் பந்தை ஸ்விங் செய்யும் பந்துவீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சிறப்பாக செயல்பட உதவும். இதனால் இங்கு பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே நல்ல போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 14
  • பெஷாவர் ஸால்மி - 04
  • முல்தான் சுல்தான்ஸ் - 10

உத்தேச லெவன்

முல்தான் சுல்தான்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், முகமது ரிஸ்வான் (கே), உஸ்மான் கான், இஃப்திகார் அகமது, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, உசாமா மிர், முகமது அலி, பைசல் அக்ரம்.

பெஷாவர் ஸால்மி: பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், முகமது ஹாரிஸ், ஹசீபுல்லா கான், ரோவ்மன் பாவெல், ஆசிஃப் அலி, பால் வால்டர், லூக் வூட், நவீன்-உல்-ஹக், சல்மான் இர்ஷாத், ஆரிஃப் யாகூப்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான், உஸ்மான் கான் (துணை கேப்டன்)
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், பாபர் ஆசம் (கேப்டன்), சைம் அயூப்
  • ஆல்-ரவுண்டர்கள்: இஃப்திகார் அகமது, ரோவ்மேன் பவல், பில் வால்டர், கிறிஸ் ஜோர்டான்
  • பந்துவீச்சாளர்கள்: லூக் வூட், டேவிட் வில்லி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement