Advertisement

பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan February 23, 2024 • 14:54 PM
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 9ஆவது லீக் ஆட்டத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை எதிர்த்து பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி விளையாடவுள்ளது. நடப்பு பிஎஸ்எல் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் பெஷாவர் ஸால்மி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன் புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய பெஷாவர் ஸால்மி போராடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி
  • இடம் - முல்தான் கிரிக்கெட் மைதானம், முல்தான்
  • நேரம் - இரவு 7.30 மணி

பிட்ர் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் முல்தான் கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. மேலும் இந்த மைதானத்தின் கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சோஸிங் செய்த அணிகளே வெற்றியைப் பெற்றுள்ளன. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 13
  • முல்தான் சுல்தான்ஸ் - 10
  • பெஷாவர் ஸால்மி - 03

உத்தேச லெவன்

முல்தான் சுல்தான்ஸ்: முகமது ரிஸ்வான் (கே), டேவிட் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், யாசிர் கான், இஃப்திகார் அகமது, குஷ்தில் ஷா, டேவிட் வில்லி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அலி, ஷாநவாஸ் தஹானி

பெஷாவர் ஸால்மி: சைம் அயூப், பாபர் ஆசாம் (கே), முகமது ஹாரிஸ், டாம் கோஹ்லர்-காட்மோர், ரோவ்மேன் பவல், ஆசிஃப் அலி, அமீர் ஜமால், லூக் வூட், முகமது ஜீஷான், வக்கார் சலாம்கெயில், சல்மான் இர்ஷாத்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான் (துணை கேப்டன்), முகமது ஹாரிஸ்
  • பேட்டர்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், பாபர் ஆசாம் (கேப்டன்), டேவிட் மலான், சைம் அயூப்
  • ஆல்-ரவுண்டர்கள்: இஃப்திகார் அகமது, ரோவ்மன் பவல், குஸ்டில் ஷா
  • பந்துவீச்சாளர்கள்: லூக் வூட், டேவிட் வில்லி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement