Advertisement
Advertisement
Advertisement

பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷவார் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan March 13, 2024 • 14:33 PM
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
பிஎஸ்எல் 2024: முல்தன் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் பெஷாவர் ஸால்மி, முல்தான் சுல்தன்ஸ், குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இதில் நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ள முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்க் முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - முல்தான் சுல்தான்ஸ் vs பெஷாவர் ஸால்மி 
  • இடம் - தேசிய கிரிக்கெட் மைதானம், கராச்சி
  • நேரம் - இரவு 9.30 மணி

பிட்ச் ரிப்போர்ட்

இப்போட்டி நடைபெறும் கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதகமானதாக இருந்து வருகிறது. அதிலும் இந்த அமைதானத்தின் பேட்டங் சராசரியானது 180 ரன்களை தாண்டுவதால் பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக பார்க்கப்படுகிறது. அதேசயம் கடந்த சீசனில் இந்த மைதானத்தில் நடைபெற்ற சில போட்டிகளில் இமாலய இலக்குகளையும் அணிகள் எளிதாக கடந்து வெற்றிபெற்றிருந்தன. இதனால் இப்போட்டியின் இரு இன்னிங்ஸிலும் மைதானத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோரை குவிக்கலாம்.

நேரலை 

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலி மூலம் நேரலையில் கண்டுகளிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 15
  • முல்தான் சுல்தான்ஸ் -10
  • பெஷாவர் ஸால்மி- 05

உத்தேச லெவன்

முல்தான் சுல்தான்ஸ்: முகமது ரிஸ்வான் (கே), யாசிர் கான், உஸ்மான் கான், ஜான்சன் சார்லஸ், இஃப்திகார் அகமது, கிறிஸ் ஜோர்டான், தயப் தாஹிர், டேவிட் வில்லி, உசாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, முகமது அலி

பெஷாவர் ஸால்மி: பாபர் ஆசாம் (கே), சைம் அயூப், முகமது ஹாரிஸ், டாம் கோஹ்லர்-காட்மோர், ரோவ்மன் பாவெல், ஹசீபுல்லா கான், அமீர் ஜமால், லூக் வுட், நவீன்-உல்-ஹக், அய்மல் கான், மெஹ்ரான் மும்தாஜ்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான், உஸ்மான் கான்
  • பேட்டர்ஸ்: ஜான்சன் சார்லஸ், பாபர் ஆசாம் (கேப்டன்), ரோவ்மேன் பவல்
  • ஆல்-ரவுண்டர்கள்: இப்திகார் அகமது(துணைக்கேப்டன்), சைம் அயூப், அமீர் ஜமால், கிறிஸ் ஜோர்டான்
  • பந்துவீச்சாளர்கள்: நவீன்-உல்-ஹக், டேவிட் வில்லி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement