Advertisement

WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 22, 2024 • 22:21 PM
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Advertisement

மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் பெங்களூர் மற்றும் டெல்லி என இரண்டு இடங்களில் நடக்கிறது. அதன்படி நாளை தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிரித்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடி வீராங்கனைகள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு\
  • நேரம் -  இரவு 7.30 மணி 

நேரலை

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசனை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 ஹச்டி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் நேரலை கண்டுகளிக்கலாம். அதேபோல் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை ரசிகர்கள் இலவசமாக காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 03
  • மும்பை இந்தியன்ஸ் - 02
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 01

பிட்ச் ரிப்போர்ட்

இத்தொடரின் முதல் பாதி லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியாக இந்த மைதானத்தில் பேட்டர்கள் பெரிதளவில் சோபிக்க முடியும். மேலும் சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரும் இந்த மைதானத்தில் நடைபெற்றது. இது அதிக ரன்கள் கொண்ட தொடராக அமைந்தது. எனவே இங்கு சில பெரிய ஸ்கோரிங் போட்டிகளை ரசிகர்கள் காணமுடியும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உத்தேச லெவன்

மும்பை இந்தியன்ஸ்: நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹிலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்பிரீத் கவுர்(கே), அமெலியா கெர், பூஜா வஸ்த்ரகர், இஸ்ஸி வோங், சைகா இஷாக், ஹுமைரா காசி, அமன்ஜோத் கவுர், ஷப்னிம் இஸ்மாயில்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: மெக் லெனிங் (கே), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிஸான் கேப், தனியா பாட்டியா, ஆலிஸ் கேப்ஸி, அருந்ததி ரெட்டி, அனபெல் சதர்லேண்ட், மின்னு மணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: யாஸ்திகா பாட்டியா
  • பேட்டர்ஸ்: மெக் லெனிங், ஷஃபாலி வர்மா, ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்-ரவுண்டர்கள்: நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), ஹிலி மேத்யூஸ் (துணை கேப்டன்), மரிஸான் கேப், ஆலிஸ் கேப்ஸி, அமெலியா கெர், அனபெல் சதர்லேண்ட்
  • பந்து வீச்சாளர்கள்: பூஜா வஸ்த்ரகர்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement