
Mumbai Appoints Amol Muzumdar As Coach Of Senior Team (Image Source: Google)
நடப்பாண்டு விஜய் ஹசாரே கோப்பையை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் செயல்பட்டார். ஆனால் அவர் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் விண்ணப்பங்களை கோரியிருந்தது. இதில் முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர், சைராஜ் பஹுதுலே, அமோல் முசும்தார் போன்ற பலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள்.
இந்நிலையில் அமோல் முசும்தார் மும்பை அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பையை 41 முறை வென்று சாதனை படைத்த மும்பை அணி, 2015-16-க்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வெல்லவில்லை. இதனால் ரஞ்சி கோப்பையை வெல்வது முதல் லட்சியமாக இருக்கும் என முசும்தார் கூறியுள்ளார்.