
Mumbai Indians Bring In Left Arm Spinner Kumar Kartikeya Singh To The Squad (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இம்முறை மோசமாக விளையாடி வருகிறது. நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் வேறு எந்த அணியுன் முதல் 8 ஆட்டங்களில் தோல்வியடைந்ததில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அர்ஷத் கான், காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இடக்கைச் சுழற்பந்து வீச்சாளரான குமார் கார்த்திகேயா சிங்கை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது மும்பை அணி.