
Mumbai Indians name Suryakumar Yadav’s replacement for last 2 league matches of IPL 2022 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை வென்ற மும்பை அணி, ஆகாஷ் மத்வால் என்கிற வீரரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ், காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதால் புதிய வீரரைத் தேர்வு செய்துள்ளதாக மும்பை அணி விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கெனவே வலைப்பயிற்சிக்கான வீரர்களில் ஒருவராக ஆகாஷ் இருந்த நிலையில் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் அணியைச் சேர்ந்த 28 வயது வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், 2019 முதல் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.