Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!

சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Advertisement
Mumbai Indians opt to bat
Mumbai Indians opt to bat (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 17, 2021 • 07:13 PM

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி  வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 17, 2021 • 07:13 PM

இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 
 
இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் மார்கோ ஜான்செனிற்கு பதிலாக ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன், ஜேசன் ஹோல்டர், சபாஷ் நதீம், சஹா  ஆகியோருக்கு பதிலாக அபிஷேக் சர்மா, கலீல் அஹ்மத், முஜிப் உர் ரஹ்மான், விராட் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சஹார், ஆடம் மில்னே, ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

Trending

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விராட் சிங், விஜய் சங்கர், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், முஜிப் உர் ரஹ்மான், கலீல் அஹ்மத்.
 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement