
ஐபிஎல் தொடரின் 69வது லீக் போட்டியில் நேற்று டெல்லி அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. இதன் பின்னர் ஆடிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 160/5 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது
நேற்றைய போட்டி டெல்லி அணிக்கு வாழ்வா? சாவா? போட்டியாக அமைந்திருந்தது. அதாவது மும்பை அணியை வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. மும்பை அணி ஃபார்மில் இல்லாததால் வீழ்த்திட முடியும் என்ற நம்பிக்கையில் டெல்லி இருந்தது. ஆனால் கடும் போராட்டத்திற்கு பிறகு மும்பை வெற்றி கண்டது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோற்றதால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. ஆர்சிபி அணிக்காக தான் மும்பை அணி போராடி வெற்றி கண்டுள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மும்பை - ஆர்சிபி நண்பர்கள் என மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.