
Mumbai Indians spinner Piyush Chawla's father passes away due to covid (Image Source: Google)
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா. இவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பியூஷ் சாவ்லாவின் தந்தை பிரமோத் குமார் கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தகவலை பியூஷ் சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்தார்.