Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

ஐபிஎல் தொடரில் நாளை நாடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Advertisement
Mumbai Indians vs Kolkata Knight Riders, 34th IPL Match – Cricket Match Prediction, Fantasy XI Tips
Mumbai Indians vs Kolkata Knight Riders, 34th IPL Match – Cricket Match Prediction, Fantasy XI Tips (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 22, 2021 • 01:40 PM

கரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம், தற்போது அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்லும் இத்தொடரினால் ரசிகர்களில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 22, 2021 • 01:40 PM

இந்நிலையில் நாளை நாடைபெறும் 34ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Trending

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • நேரம் - இரவு 7.30 மணி
  • இடம் -ஷேக் சயீத் மைதானம், அபுதாபி

போட்டி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணி முன்னதாக நடைபெற்ற சிஎஸ்கே அணியுடனான போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளதால், நிச்சயம் இப்போட்டியில் வெற்றிபெறும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. 

மேலும் சிஎஸ்கே அணியுடனான போட்டியில் பங்கேற்காமல் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா , இப்போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் மும்பை அணியின் பேட்டிங் பலமும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரை ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துவருகின்றனர். அவர்களுடன் ராகுல் சஹார், குர்னால் பாண்டியாவும் சிறப்பாக செயல்பட்டால் அது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியிருந்தது. அதிலும் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுதியதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நைரன், ஆண்ட்ரே ரஸ்ஸல், லோக்கி ஃபர்குசன், கம்ளேஷ் நாகர்கொட்டி ஆகியோர் இருப்பது அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய ஆட்டங்கள் - 28
  • மும்பை வெற்றி - 22
  • கொல்கத்தா வெற்றி- 6

உத்தேச அணி

மும்பை இந்தியன்ஸ் - குயின்டன் டி காக், இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், கீரேன் பொல்லார்ட், சவுரப் திவாரி, குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன் (கே), ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பிளிட்ஸ் பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குயின்டன் டி காக்
  • பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, சுப்மான் கில்
  • ஆல் -ரவுண்டர்கள் - கீரேன் பொல்லார்ட், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல்
  • பந்து வீச்சாளர்கள் - ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement