ஐபிஎல் திருவிழா 2022: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐ.பி எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை இண்டியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்க்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி தயாராகிவருகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் புனே நகரங்களில் களைகட்டி வருகிறது. சொந்த மைதானத்தில் போட்டிகள் நடந்தாலும் மும்பை அணிக்கு தோல்வி முகமே மிஞ்சுகிறது.
இதில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இண்டியன்ஸ் அணியும் - மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - எம்சிஏ மைதானம், புனே
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை அணி முதல் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அத்துடன் இதுவரை தனக்கு பார்ட்னராக இருந்த சென்னை அணியும் ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளதால் வெற்றி பெற்றாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு மும்பை அணி தள்ளப்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையில் வலது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுழல்பந்துவீச்சாளரும் லெக் ஸ்பின்னருமான ஃபேபியன் ஆலனை ஆடும் லெவனில் சேர்க்க வாய்ப்புள்ளது. அத்துடன் தொடர்ந்து சொதப்புவதால் பாசில் தம்பிக்கு ஓய்வு வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.
பவர் பிளேயில் இரு அணிகளும் ரன்களை வாரி வழங்குகின்றன. ஆறு ஓவர்களுக்கு 60 ரன்களை விட்டுக்கொடுப்பதில் இரு அணிகளும் கில்லாடிகளாக இருக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்பிளேயில் இழந்த ரன்னை பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறது ஆனால் மும்பை அணி சொதப்புகிறது.
இன்னும் 25 ரன்கள் அடித்தால் டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கிறார் ரோஹித் ஷர்மா, விராட் கோலியை தொடர்ந்து இரண்டாவது இந்தியராகவும், ஒட்டுமொத்தத்தில் ஏழாவது வீரர் என்ற பெருமையை படைக்கவுள்ளார். பேபி ஏபிடி என அழைக்கப்படும் ப்ரீவிஸ் அசுர ஃபார்மில் உள்ளார். அத்துடன் திலக் வர்மாவும் அசத்துகிறார்.
பஞ்சாப் அணியை பொருத்தவரை இரண்டு வெற்றி, தோல்விகளை பதிவு செய்துள்ளது. பேட்டிங்கில் அசத்தலும், பந்துவீச்சில் சொதப்பலையும் வெளிப்படுத்துகின்றனர். கிறிஸ் கெய்ல் இல்லாத குறையை லிவிங்ஸ்டன் நிரப்பி வருகிறார். தவான்,மயங்,பேர்ஸ்டோ,லிவிங்ஸ்டன், ஜிதிஷ், ஷாரூக் என ஏழு பேட்ஸ்மேன்கள் வரிசை கட்டி நிற்கின்றனர்.
ஏற்கனவே பௌலிங்கில் சொதப்பும் மும்பை அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்க்க இவர்கள் காத்திருக்கின்றனர். நான்கு போட்டிகளில் மூன்றில் 180 ரன்களை கடந்திருப்பதே பஞ்சாப்பின் பேட்டிங் ஃபார்மை எடுத்துரைக்கிறது. பவர் பிளேயில் ராகுல் சஹரை பயன்படுத்தி இஷாந்த் கிஷன் விக்கெட்டை வீழ்த்த பஞ்சாப் யூகித்துள்ளது. ரபடா வேகம் இன்று கைகொடுக்கும் என்றே நம்பலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 28
- மும்பை வெற்றி - 15
- பஞ்சாப் வெற்றி - 13
உத்தேச அணி
மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், ராமன்தீப் சிங்/ டிம் டேவிட், முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி.
பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால் (கே), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஒடியன் ஸ்மித்/ பானுகா ராஜபக்சே, ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷன், ஜானி பேர்ஸ்டோ, ஜிதேஷ் சர்மா
- பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷிகர் தவான்
- ஆல்-ரவுண்டர்கள் - டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டோன்
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரிட் பும்ரா, ராகுல் சாஹர், ககிசோ ரபாடா
Win Big, Make Your Cricket Tales Now