
ஹர்திக் பாண்டியாவிற்கு வாழ்த்து தெரிவித்த மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதால் தற்போது இறுதிகட்ட பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த சீசனில் விளையாடும் 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் தற்போது அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகளும் தங்களது அணியில் சேர்த்துள்ள 3 வீரர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிட்டது.
அதன்படி இந்த சீசனில் கூடுதலாக சேர்க்கப்பட்ட அகமதாபாத் அணியின் கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய ஹர்டிக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா, கீரன் பொல்லார்டு மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நான்கு வீரர்கள் தக்க வைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களை அந்த அணி வெளியேற்றியது.