Advertisement
Advertisement
Advertisement

தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!

நியூசிலாந்துக்கு எதிரான யு19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய வீரர் முஷீர் கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 30, 2024 • 20:56 PM
தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி!
தல தோனியை நினைவு படுத்திய முஷீர் கான்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

ஐசிசி அண்டர்19 வீரர்களுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ள இந்திய அண்டர்19 அணி அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெய்து மீண்டு ஒருமுறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. 

அந்தவகையில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை 214 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முஷீர் கானின் அபாரமான சதத்தின் மூலம் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்களைக் குவித்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் 13 பவுண்டரி, 3 சிக்சர்களும் 131 ரன்களைக் குவித்தார். 

Trending


இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 28.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவிய முஷீர் கான் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

 

இந்நிலையில், இப்போட்டியில் முஷீர் கான் அடித்த சிக்சர் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஏனெனில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தேனியின் அடையாள ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்சர் அடித்து முஷீர் கான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் முஷீர் கான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement